அமெரிக்க உயர்கல்வி குறித்த அமெரிக்க அரசின் அதிகாரப்பூர்வ தகவல் அமைப்பான எஜுகேஷன் யுஎஸ்ஏ (EducationUSA), ஆகஸ்ட் 9ம் தேதி சென்னையில் தொடங்கி ஆகஸ்ட் 17ம் தேதி புனேவில் நிறைவடையும் வகையில் நாடு தழுவிய எட்டு அமெரிக்க கல்வி கண்காட்சிகளை நடத்தும். ஐம்பதுக்கும் மேற்பட்ட அங்கீகாரம் பெற்ற அமெரிக்க பல்கலைக்கழகங்கள் இதில் பங்கேற்கும். மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அமெரிக்க கல்வி நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ பிரதிநிதிகளைச் சந்திக்க ஒரு தனித்துவமான வாய்ப்பை இக்கண்காட்சி வழங்குகிறது. பின்வரும் இணைப்பில் பதிவு செய்து கொண்டு கண்காட்சிகளில் மக்கள் இலவசமாக கலந்து கொள்ளலாம்: https://bit.ly/EdUSAFair25EMB.
அமெரிக்காவில் உலகத்தரம் வாய்ந்த கல்வியை நோக்கிய பாதைகளை உருவாக்க உதவும் வகையில் கல்வி நிபுணர்களிடமிருந்து நேரடி ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலைப் பெற ஆர்வமுள்ள இளநிலை, பட்டதாரி அல்லது முனைவர் பட்ட மாணவர்களுக்கான சிறந்த வாய்ப்பாக இந்த கண்காட்சிகள் செயல்படுகின்றன.
பல்கலைக்கழக அலுவலர்கள், எஜுகேஷன் யுஎஸ்ஏ ஆலோசகர்கள் மற்றும் அமெரிக்க தூதரக பிரதிநிதிகளுடனான நேரடி ஆலோசனை மூலம், நம்பகமான மற்றும் வெளிப்படையான தகவல்களைப் பங்கேற்பாளர்கள் பெறுவார்கள். தகவலறிந்த தேர்வுகளைச் செய்யவும், கல்வி வெற்றிக்கான சட்டபூர்வமான வழிமுறைகளைப் பின்பற்றவும் இது உதவும்.
இந்தக் கண்காட்சிகளில் அமெரிக்காவில் உள்ள படிப்புகள், விண்ணப்ப செயல்முறைகள், உதவித்தொகைகள், தகுதி மற்றும் கல்லூரி வாழ்க்கை ஆகியவற்றை உள்ளடக்கிய நிபுணர்கள் தலைமையிலான அமர்வுகளும் இடம்பெறும். அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் முதல் கலை, வணிகம் மற்றும் பல துறைகள் என இந்த நிகழ்வுகள் இந்திய மாணவர்களுக்கு அமெரிக்காவில் உயர்கல்வியைத் தொடரத் தேவையான தகவல் அறிவை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன.
1. சனிக்கிழமை, ஆகஸ்ட் 9: சென்னையில் ஹோட்டல் ஹில்டன், பிற்பகல் 2:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை
2. ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 10: பெங்களூருவில் ஹோட்டல் ஹயாட் சென்ட்ரிக் ஹெப்பால், பிற்பகல் 1:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை
3. திங்கள், ஆகஸ்ட் 11: ஹைதராபாத்தில் ஹோட்டல் ஐடிசி கோஹினூர், பிற்பகல் 4:30 மணி முதல் மாலை 7:30 மணி வரை
4. செவ்வாய், ஆகஸ்ட் 12: புது தில்லியில் ஹோட்டல் தி லலித், மாலை 6:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை
5. புதன், ஆகஸ்ட் 13: கொல்கத்தாவில் ஹோட்டல் தி பார்க், மாலை 6:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை
6. வெள்ளி, ஆகஸ்ட் 15: அகமதாபாத்தில் ஹோட்டல் ஹயாட் வஸ்த்ரபூர், பிற்பகல் 2:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை
7. சனிக்கிழமை, ஆகஸ்ட் 16: மும்பையில் ஹோட்டல் செயிண்ட் ரெஜிஸ், பிற்பகல் 2:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை
8. ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 17: புனேவில் ஹோட்டல் ஷெரட்டன் கிராண்ட் புனே பண்ட் கார்டன், பிற்பகல் 2:00 மணி முதல் மாலை 5:00 மணி
எஜுகேஷன் யுஎஸ்ஏ என்பது 175-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள 430-க்கும் மேற்பட்ட சர்வதேச மாணவர் ஆலோசனை மையங்களைக் கொண்ட அமெரிக்க வெளியுறவுத் துறையின் அமைப்பு ஆகும். இந்தியாவில், டெல்லி, சென்னை, கொல்கத்தா, மும்பை, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் உள்ள ஐந்து மையங்கள் மூலம் எஜுகேஷன் யுஎஸ்ஏவின் சேவை வழங்கப்படுகிறது. .
அமெரிக்காவில் உள்ள அங்கீகாரம் பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி பெற விரும்பும் மாணவர்களுக்கு, அமெரிக்க உயர்கல்வி குறித்த மிகவும் சமீபத்திய, துல்லியமான மற்றும் விரிவான தகவல்களை எஜுகேஷன் யுஎஸ்ஏ வழங்குகிறது. www.educationusa.in தளத்தில் மேலும் அறிந்து கொள்ளலாம் அல்லது india@educationusa.org மின்னஞ்சலைத் தொடர்புகொள்ளலாம்.