தமிழ்நாடு

பெங்களூரு டூ சென்னை... 23 மணி நேர பயணம்.. சசிகலாவின் கார் டிரைவர் யார் தெரியுமா?

JustinDurai

பயணம் தொடங்கி சுமார் 23 மணி நேரத்திற்கு பின்னர் தற்போது தி.நகரில் இருக்கும் வீட்டுக்கு சசிகலா வந்தடைந்தார்.

சொத்துக் குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை முடித்து, சசிகலா நேற்று காலை சுமார் 7.30 மணி அளவில் பெங்களுருவில் இருந்து சென்னை புறப்பட்டார். வழியில் தொடர்ந்து ஆதரவாளர்களை அவர் சந்தித்து வந்ததால், அவரின் வருகை தாமதமானது. மேலும் அதிமுக கொடி விவகாரத்தால் கார்களை மாற்றிக்கொண்டே வந்தார்.

இந்த நிலையில் இன்று அதிகாலைதான் சென்னை வந்தார். பயணம் தொடங்கி சுமார் 23 மணி நேரம் கழித்து தற்போது தி.நகரில் இருக்கும் வீட்டுக்கு சசிகலா வந்தடைந்தார். முன்னதாக ராமாபுரத்தில் எம்.ஜி.ஆர் இல்லத்தில் மலர் தூவி மரியாதை செய்தார் சசிகலா. சசிகலாவுடன் இளவரசியும், தினகரன் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களும் சென்னை வந்தனர்.

பெங்களூருவிலிருந்து சென்னை வரை 23 மணி நேரத்திற்கும் மேலாக சசிகலா பயணித்து வந்த காரை பிரபு என்பவர் ஓட்டி வந்தார். இவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநராக 25 ஆண்டுகள் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.