தமிழ்நாடு

உங்களுக்கு வாக்கு இருக்கிறதா தெரிந்துகொள்வது எப்படி?

உங்களுக்கு வாக்கு இருக்கிறதா தெரிந்துகொள்வது எப்படி?

webteam

இன்னும் சில மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மொத்தமாக எவ்வளவு வாக்காளர்கள் உள்ளனர் என்பது குறித்த விவரங்களை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ இன்று வெளியிட்டார். அதன்படி தமிழகத்தில் மொத்தமாக 5 கோடியே 91 லட்சம் வாக்காளர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 2.92 கோடி ஆண் வாக்காளர்களும், 2.98 கோடி பெண் வாக்காளர்களும், 5472 மூன்றாம் பாலினத்தவர்களும் உள்ளனர். 

இந்நிலையில் தற்போது வாக்காளர் பட்டியலில் நம்முடை பெயர் இருப்பதை எவ்வாறு தெரிந்துகொள்ளலாம் என்று பார்ப்போம்.

முதலில் www.elections.tn.gov.in அல்லது national voters services portal என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

அங்கு our services என்பதை click செய்யவேண்டும்.

அதன்பின்பு Search voter listஐ click செய்யவேண்டும்.

தற்போது இந்த Formஇல் உங்களுடைய பெயர், தந்தையின் பெயர், வயது ஆகியவற்றை கொடுக்கவேண்டும்.

அதற்குபிறகு, உங்கள் மாநிலத்தின் பெயர், மாவட்டம் மற்றும் சட்டமன்ற தொகுதி ஆகியவற்றை கொடுத்து

captchaஐ type செய்து searchஐ click செய்யவேண்டும்.

வாக்காளர் பட்டியலில் உங்களுடைய பெயர் இருந்தால்  திரையின் கீழ் உங்களுடைய வாக்காளர் எண்ணுடன் கூடிய விவரங்கள் வரும்.

இதன்மூலம் நீங்கள் வாக்காளர் பட்டியலில் உங்களுடைய பெயர் இருப்பதை தெரிந்துகொள்ளலாம்.