தமிழ்நாட்டில் ஷேல் எரிவாயுவையோ, மீத்தேனையோ எடுக்கவில்லை என ஓஎன்ஜிசி விளக்கம் அளித்துள்ளது.
ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக நெடுவாசலில் போராட்டம் தொடர்ந்து கொண்டு உள்ளது. இந்நிலையில் நெடுவாசலில் நடைபெற்ற ஆய்வுப் பணிகள் குறித்து ஓஎன்ஜிசி விளக்கம் அளித்துள்ளது. அதில், தமிழ்நாட்டில் ஷேல் எரிவாயுவையோ, மீத்தேனையோ எடுக்கவில்லை என கூறியுள்ளது. கடந்த 50 ஆண்டுகளாக டெல்டா பகுதிகளில் செயல்பட்டு வருவதாக கூறியுள்ள ஓஎன்ஜிசி இதுவரை எந்தபகுதியிலும் விவசாயம் பாதித்ததற்கான அறிகுறி இல்லை எனவும் தெரிவித்துள்ளது.
5 நிதியாண்டில் 1816.43 கோடி ரூபாய் வரியை தமிழக அரசுக்கு செலுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ள ஓஎன்ஜிசி ஒரு சிலரால் பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.