அதிமுகவில் எந்த பதவிக்கும் வராமலேயே கட்சியை பாதுகாப்பேன் என சசிகலா கணவர் நடராஜன் கூறியுள்ளார்.
அதிமுகவின் பொதுச்செயலாளர் சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைக்குச் சென்ற பின் டிடிவி தினகரன் துணைப் பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில், தஞ்சையில் நடந்த ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவில் பேசிய சசிகலா கணவர் நடராஜன், ஜெயலலிதா புகழ் இருக்கும் வரை அதிமுகவை யாராலும் எதுவும் செய்ய முடியாது என்றார். கட்சியில் நான் எந்த பதவிக்கும் வர மாட்டேன், பதவிக்கு வராமலேயே கட்சியைப் பாதுகாப்பேன் எனக் கூறியுள்ளார். மேலும், திமுக செயல் தலைவர் ஸ்டாலின் செயலற்ற தலைவராகி விட்டதாகவும் நடராஜன் விமர்சனம் செய்தார்.