மாணவர்களின் எதிர்காலத்துடன் தொடர்ந்து விளையாட வேண்டாம் என்று திமுக அரசை திமுக தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “எதைச் செய்தாலும் அவசர அவசரமாகச் செய்து சம்பந்தப்பட்டவர்களை கடும் பாதிப்புக்கு ஆளாக்கிவரும் எடப்பாடி பழனிசாமி அரசு, தற்போது கல்லூரி மாணவர்களின் எதிர்கால நலனிலும் அதே அவசர விளையாட்டை ஆடிக் கொண்டிருக்கிறது.
கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்கள் தங்கள் முந்தையப் பருவத் தேர்வுகளில் தேர்ச்சி பெறாத பாடங்களுக்குத் தேர்வின்றி தேர்ச்சி என்கிற அறிவிப்பு வியப்பளிப்பதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவுக்கு அகில இந்தியத் தொழில்நுட்பக் கவுன்சில் எழுதிய கடிதம் தற்போது வெளியாகி இருக்கிறது. இ்ந்திய தொழில்நுட்பக் கவுன்சிலின் இந்தக் கடிதம், மாணவர்களின் எதிர்காலம் குறித்து அதிர்ச்சியையும் கவலையையும் அளிக்கிறது.
கல்லூரி மாணவர்களின் எதிர்காலத்தை வீணடிக்க, அதிமுக அரசு கபடநாடகம் ஆடுகிறதா? என்ற கேள்வி பெற்றோர் மனதில் எழுந்திருக்கிறது” என ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.