சென்னை மேயர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்று இளைஞர் அணி சார்பில் விருப்ப மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்பும் நபர்கள் அந்தந்த மாவட்டங்களில் தங்களின் விருப்ப மனுவை பெற்றுக் கொண்டு வருகின்றனர். அந்தவகையில் சென்னை மாநகராட்சியின் மேயர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் போட்டியிடவேண்டும் என்று விருப்ப மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த விருப்பமனு திமுகவின் இளைஞர் அணி சார்பில் அளிக்கப்பட்டுள்ளது. திமுகவில் தற்போது இளைஞர் அணிச் செயலாளர் பதவியில் உதயநிதி ஸ்டாலின் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.