’’சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை வலியுறுத்த மாட்டோம்’’ என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் நடப்பு ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது. பின் பட்ஜெட் மீதான விவாதம் நடத்தப்பட்டு, தேதி குறிப்பிடப்படாமல் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் மக்கள வை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் முடிந்து தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. பரபரப் பான அரசியல் சூழ்நிலைகளுக்கு இடையே இன்று காலை பத்து மணிக்கு சட்டப்பேரவை கூடியது.
சட்டப்பேரவை கூடியதும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களான சுந்தரதாஸ், பஞ்சவர்ணம், சுப்பிரமணியம், செல்வராஜ், சுந்தரவேல், ராமநாதன், முனுசாமி மற்றும் சிவசுப்பிரமணியன் ஆகிய 7 பேரின் மறைவுக்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப் பட்டது. மேலும், மறைந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கனகராஜ் மற்றும் ராதாமணி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டு சபை ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘’சபாநாயகர் தனபால் மீது கொடுத்த தீர்மானத்தை எடுக்க வலியுறுத்த மாட்டோம். அன்றைய சூழலில் நம்பிக்கையில்லாத தீர்மானம் வேண்டும் என்று கடிதம் கொடுத்தோம். இப்போது அதை வலியுறுத்தவில்லை என்று சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ளோம்’’ என்றார்.