விவசாயிகளைக் காப்பாற்றுவதற்கு பதிலாக தங்களது பதவிகளைக் காப்பாற்றிக் கொள்வதிலேயே தமிழக அமைச்சர்கள் கவனம் செலுத்தி வருவதாக, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
விவசாயிகளுக்கு ஆதரவாக நாளை நடைபெற உள்ள முழு அடைப்புப் போராட்டம் குறித்து தஞ்சாவூரில் நடைபெற்ற விளக்கப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், அதிமுகவின் இரு அணியினரும் ஊழலைத் தொடரவே மீண்டும் இணையத் திட்டமிடுகின்றன. விவசாயிகளின் பிரச்னைகளுக்கு மற்ற மாநிலங்களில் அனைத்துக் கட்சிகளும் ஒற்றுமையுடன் செயல்படுகின்றன.
ஆனால், தமிழகத்தில் நியாயம் கேட்கும் போராட்டத்தை பிற கட்சிகள் கொச்சைப் படுத்துகின்றன. விவசாயிகள் பிரச்னைகளைப் பேசுவதற்கு, திமுகவுக்கும் இந்தப் போராட்டத்தில் உடன் களமிறங்கும் மற்ற கட்சிகளுக்கும் மட்டுமே தகுதி இருக்கிறது’ என்றார் அவர்.