தமிழ்நாடு

தனியார் மருத்துவக்கல்லூரியில் அரசு மாணவர்களின் கல்விக்கட்டணத்தை திமுக ஏற்கும் - ஸ்டாலின்

தனியார் மருத்துவக்கல்லூரியில் அரசு மாணவர்களின் கல்விக்கட்டணத்தை திமுக ஏற்கும் - ஸ்டாலின்

webteam

தனியார் மருத்துவக்கல்லூரியில் இடம் ஒதுக்கப்படும் அரசு மாணவர்களின் கல்விக்கட்டணத்தை திமுக ஏற்றுக்கொள்ளும் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 7.5 சதவித உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதில் அரசு மருத்துவக்கல்லூரியில் 227 இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள இடங்கள் தனியார் கல்லூரிகளில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ஆனால் தனியார் கல்லூரியில் இடம் ஒதுக்கப்படும் ஏழை மாணவர்கள் எப்படி கல்விக்கட்டணத்தைச் செலுத்துவார்கள் என்ற விமர்சனம் எழுந்தது. இந்நிலையில் தனியார் கல்லூரியில் இடம் ஒதுக்கப்பட்டும் அரசுப்பள்ளி மாணவர்களின் கல்விக்கட்டணத்தை திமுக ஏற்கும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.