தமிழ்நாடு

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக திமுக நாளை ரயில் மறியல்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக திமுக நாளை ரயில் மறியல்

webteam

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் திமுக சார்பில் நாளை ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என அக்கட்சியின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வலியுறுத்தி மாநிலம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் நாளை கடையடைப்பு, உண்ணாவிரதம், மனித சங்கிலி போராட்டம் அறிவித்துள்ளன. அதன் ஒரு பகுதியாக திமுக மாநிலம் முழுவதும் நாளை ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளது.