திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிகளின் கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெற உள்ளதாக திமுக தெரிவித்துள்ளது
இது குறித்து செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ள திமுக, ''திமுக சார்பில் வரும் 31-ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு காணொலி மூலம் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிகளின் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நீட் இடஒதுக்கீடு தொடர்பாகவும், கொரோனா தடுப்பு பணியில் மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடு குறித்தும் ஆலோசிக்கப்படும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது