தமிழ்நாடு

குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் ஸ்டாலின்

குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் ஸ்டாலின்

webteam

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பிப்ரவரி 23ஆம் தேதி குடியரசுத் தலைவரைச் சந்திக்கிறார்.

நம்பிக்கை வாக்கெடுப்பின்போது சட்டப்பேரவையில் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் முறையிடுவார் என தெரிகிறது. இந்த விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவரைச் சந்திக்க நேரம் கேட்டிருப்பதாக, சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது ஸ்டாலின் கூறியிருந்த நிலையில், இந்தத் தகவல் வெளியாகி உள்ளது.