தமிழ்நாடு

7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநருடன் திமுக தலைவர் சந்திப்பு

webteam

7 பேர் விடுதலை தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக ஆளுநர் பல்வாரிலாலை சந்தித்து திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என சிறப்பு மசோதா நிறைவேற்றப்பட்டு தமிழக அரசு, ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. ஆனால் ஆளுநர் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தமிழக அரசும் எதிர்க்கட்சிகளும் விரைந்து நடவடிக்கை எடுக்க ஆளுநருக்கு கோரிக்கை விடுத்து வருகின்றன.

இதனிடையே நேற்று தமிழக முதலமைச்சர் ஆளுநரை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியது. ஆனால் திடீரென அந்த திட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் சென்னை ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலாலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்துள்ளார். அப்போது ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளர் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.