திமுக தண்ணீரில் மூழ்கி வரும் கப்பல் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும்போது, ’மாணவர்களின் தரத்தை உயர்த்துவதற்காக மத்திய அரசு எடுக்கும் முயற்சியை தமிழக மருத்துவ மாணவர்கள் தடுப்பது ஆரோக்கியமான செயலல்ல என்றார்.
தமிழகத்தில் தமிழே படிக்காமல் பிஹெச்டி பட்டம் பெரும் நிலை உள்ளது என்ற அவர், மத்திய அரசு தமிழகத்துக்கு தந்த நிதியை மாநில அரசு என்ன செய்தது என்று கேள்வி எழுப்பினார். தமிழர்களை ஏமாற்ற திமுக பயன்படுத்திய வார்த்தைதான் மாநில சுயாட்சி; திமுக தண்ணீரில் மூழ்கிவரும் ஒரு கப்பல்’ என்றும் அவர் கூறினார்.