திமுக சரவணன். ஆளுநர் ஆர்.என்.ரவி
திமுக சரவணன். ஆளுநர் ஆர்.என்.ரவி pt web
தமிழ்நாடு

“கீழ விழுந்துட்டேன்.. ஆனால் மீசையில மண் ஒட்டல”- ஆளுநர் குறித்து திமுக சரவணன்

Angeshwar G

ஆளுநர் முன்பு ‘நீண்ட ஆண்டுகளாக நிலுவையில் உள்ள பல்வேறு மசோதாக்கள்’ குறித்து உச்சநீதிமன்றத்தில் கடந்த வாரம் தமிழக அரசு சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் “மனுக்களை நீண்ட நாட்கள் வைத்திருக்கக் கூடாது” என உச்சநீதிமன்றம் கூறியிருந்த நிலையில், 10க்கும் மேற்பட்ட மசோதாக்களை தமிழக அரசுக்கே இன்று திருப்பி அனுப்பியுள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை மாநில அரசே நியமித்துக் கொள்வதற்கான மசோதாக்கள் உட்பட 10-க்கும் மேற்பட்ட மசோதாக்கள், சில விளக்கங்கள் கேட்டு தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழக அரசு மிக முக்கியமான ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. மீண்டும் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடரைக் கூட்டி இந்த சட்ட மசோதாக்களை நிறைவேற்றி மீண்டும் ஆளுநருக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து புதிய தலைமுறையிடம் தனது கருத்துகளை பகிர்ந்து கொண்ட திமுகவைச் சேர்ந்த சரவணன், “அடிபணிந்தார் ஆளுநர்.. அரசியல் சட்டத்தை மதிக்கக் கற்றுக்கொண்டார் ஆளுநர் என எடுத்துக்கொள்ளலாம். கீழே விழுந்துவிட்டேன் ஆனாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதுபோலத்தான் இந்த நடவடிக்கை. திமுக சட்டப் போராட்டத்திற்கு கிடைத்திருக்கக்கூடிய முழு முதல் வெற்றி” எனத் தெரிவித்துள்ளார்.