தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவும் நிலையில், திமுகவின் உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டம் நாளை நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் இந்த கூட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் தமிழகத்தின் இன்றைய அரசியல் சூழல், திமுகவின் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து விவாதிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தின் ஆளும்கட்சியான அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவால் அரசியல் களம் விறுவிறுப்படைந்துள்ள நிலையில், பிரதான எதிர்கட்சியான திமுகவின் உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.