தமிழ்நாடு

திமுக தீர்மானம் தோல்வி

திமுக தீர்மானம் தோல்வி

Rasus

தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபாலை பதவி நீக்கம் செய்யக்கோரி திமுக கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியில் முடிவடைந்தது.

சபாநாயகரை பதவியிலிருந்து நீக்க வலியுறுத்தி எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், சட்டப்பேரவை செயலகத்தில் கடந்த 9-ஆம் தேதி கடிதம் அளித்தார். இதற்கான தீர்மானத்தை இன்றைய அவை நிகழ்வில் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.

சபாநாயகரை பதவி நீக்கம் செய்யக்கோரும் இந்தத் தீர்மானத்தை, விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள 35 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருக்க வேண்டும். திமுக-விற்கு 97 எம்எல்ஏ-க்கள் ஆதரவு இருந்ததால் தீர்மானத்தை அவையில் விவாதிக்க ஆதரவு கிடைத்தது. விவாதத்திற்கு பின் வாக்கெடுப்பு நடைபெற்றது.

குரல் வாக்கெடுப்பில் நடைபெற்ற இந்த தீர்மானத்தில் திமுக தோல்வி அடைந்தது. பின்னர் எண்ணி கணிக்கும் முறையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது, தீர்மானத்துக்கு 97 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 122 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்ததால் தீர்மானம் தோல்வியில் முடிவடைந்தது.