நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் 12-வது கட்ட பட்டியலை திமுக வெளியிட்டுள்ளது,
கொளத்தூர், துறைமுகம், எழும்பூர், திரு.வி.க.நகர், அம்பத்தூர், வில்லிவாக்கம், சென்னை வடகிழக்கு மாவட்டம்
திருவொற்றியூர் தொகுதி, மாதவரம் தொகுதி, சென்னை வடக்கு மாவட்டம், பெரம்பூர், ஆர்.கே.நகர், ராயபுரம், சேப்பாக்கம், அண்ணாநகர், ஆயிரம் விளக்கு உள்ளிட்ட தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடபட்டுள்ளது. மயிலாப்பூர், தியாகராயர் நகர், விருகம்பாக்கம் தொகுதி, சைதாப்பேட்டை, வேளச்சேரி மதுரவாயல், சோழிங்கநல்லூர் தொகுதிகளுக்கும் வெளியிடப்பட்டுள்ளது.
தொண்ணூத்தி ஒன்பதாவது வார்டில் அதிமுக சிவகாமி ஐஏஎஸ் க்கு எதிராக முன்னாள் அமைச்சர் மகன் பரிதி இளம் சுருதிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மறைந்த ஜெ அன்பழகனின் மகன் ராஜா அன்பழகனுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மதிமுகவில் இருந்து வந்த வேளச்சேரி மணிமாறன்க்கு சீட் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
கடையநல்லூர், புளியங்குடி, செங்கோட்டை ஆகிய நகராட்சிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்திருக்கிறது. கோவை மாநகராட்சிக்கான திமுகவின் வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் மதுரை, தென்காசி, திருவாரூர் மாவட்ட வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. கூட்டணிக்கட்சிகளுக்கு எத்தனை இடங்கள், எந்தெந்த பகுதிகள் என தீர்மானிக்கப்பட்ட பிறகு அடுத்தகட்டமாக 9-வது பட்டியலை தற்போது திமுக வெளியிட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கான திமுக வேட்பாளர்களின் முழுப்பட்டியல் இதுவரை வெளியாகவில்லை.