தமிழ்நாடு

திமுகவின் 9வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

திமுகவின் 9வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Sinekadhara

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் 9-வது கட்ட பட்டியலை திமுக வெளியிட்டது.

கடையநல்லூர், புளியங்குடி, செங்கோட்டை ஆகிய நகராட்சிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்திருக்கிறது. கோவை மாநகராட்சிக்கான திமுகவின் வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் மதுரை, தென்காசி, திருவாரூர் மாவட்ட வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. கூட்டணிக்கட்சிகளுக்கு எத்தனை இடங்கள், எந்தெந்த பகுதிகள் என தீர்மானிக்கப்பட்ட பிறகு அடுத்தகட்டமாக 9-வது பட்டியலை தற்போது திமுக வெளியிட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கான திமுக வேட்பாளர்களின் முழுப்பட்டியல் இதுவரை வெளியாகவில்லை.