தமிழ்நாடு

கருணாநிதி பிறந்தநாள்: திருவாரூரில் இலவச உணவு.....ஒரு ரூபாய்க்கு தேநீர்

கருணாநிதி பிறந்தநாள்: திருவாரூரில் இலவச உணவு.....ஒரு ரூபாய்க்கு தேநீர்

webteam

திமுக தலைவர் கருணாநிதியின் 94வது பிறந்தநாள் விழாவையொட்டி திருவாரூரில் ஒரு உணவகத்தில் நாள் முழுவதும் இலவச உணவு வழங்கி திமுகவினர் கொண்டாடி வருகிறார்கள்.

திருவாரூரை அடுத்த புலிவலத்தில் உள்ள உணவகத்தில் காலையில் இட்லி, தோசை, பஜ்ஜி போன்றவை மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. மதியம், இரவிலும் உணவு இலவசமாக வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று கலைஞர் தேநீர் நிலையம் சார்பில் இன்று முழுவதும் ஒரு ரூபாய்க்கு தேநீர் வழங்கப்பட்டு வருகிறது.