சேலம் எடப்பாடி தொகுதியில் போட்டியிடவுள்ள வேட்பாளரை தேர்வு செய்ய திமுக தனிக்கவனம் செலுத்தி வருகிறது.
எடப்பாடி தொகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி போட்டியிட வாய்ப்பு உள்ள நிலையில், அவருக்கு எதிராக நிறுத்தப்படும் வேட்பாளரை தேர்வு செய்வதில் திமுக தனி கவனம் செலுத்தி வருகிறது.
திமுக தலைவர் முக ஸ்டாலின் எடப்பாடி தொகுதிக்காக இதுவரை 25 பேரிடம் நேர்காணல் செய்துள்ளார்.