தமிழக முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 48-ஆவது நினைவு தினத்தையொட்டி மெரினாவிலுள்ள அவரின் நினைவிடத்தில் திமுக சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
தமிழக முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 48-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, சென்னை சேப்பாக்கத்திலுள்ள அண்ணா சிலைக்கு, திமுக செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து சென்னை மெரினாவில் உள்ள அண்ணாவின் நினைவிடத்திலும் திமுக சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.