தமிழ்நாடு

முக்கிய தீர்மானங்களை விவாதிக்க திமுக கடிதம்

முக்கிய தீர்மானங்களை விவாதிக்க திமுக கடிதம்

webteam

தண்ணீர் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து நடப்பு கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேரவையில் கடிதம் கொடுத்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில், இந்தத் தொடரில் பல்வேறு தீர்மானங்களை முன்மொழிந்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேரவை தலைவரிடம் கடிதம் அளித்துள்ளார். தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறை குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என திமுக கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. வறட்சி பாதித்த மாநிலமாக தமிழகத்தை அறிவிப்பது பற்றி விவாதிக்கவும் திமுக வலியுறுத்தியுள்ளது. 

இதனைத் தொடர்ந்து புதிய கல்வி கொள்கையில் பரிந்துரைக்கப்பட்ட மும்மொழிக்கொள்கை, மத்திய அரசின் ஒரே நாடு ஒரே ரேசன் அட்டை திட்டம் குறித்து விவாதிக்க கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் கல்விக்கடன் பிரச்னை, விவசாய கடன் தள்ளுபடி, விவசாய நிலங்களில் உயர்மின் அழுத்த கோபுரம் அமைப்பது, ஹைட்ரோ கார்பன் திட்டம் ஆகியவை குறித்து விவாதிக்க வேண்டும் என ஸ்டாலின் கடிதம் அளித்துள்ளார். எனவே நடப்பு தொடரில் இந்த பிரச்னைகள் அனைத்தும் பேரவையில் எதிரொலிக்கும் என தெரிகிறது.