தமிழ்நாடு

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு ஜாமீன் : கூடுதல் அமர்வு நீதிமன்றம்

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு ஜாமீன் : கூடுதல் அமர்வு நீதிமன்றம்

webteam

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதிக்குச் சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

சென்னையில் பிப்ரவரி மாதம் நடைபெற்ற கருத்தரங்கம் ஒன்றில் ஆர்.எஸ்.பாரதி பேசிய கருத்துக்கு எதிராக, ஆதித்தமிழர் மக்கள் கட்சித் தலைவர் கல்யாணசுந்தரம் தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த மே மாதம் 23ஆம் தேதி கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.பாரதிக்கு, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் மே 31ஆம் தேதி வரை ஜாமீன் வழங்கியது.

இந்நிலையில் இன்று சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.பாராதி சரணடைந்தார். அவருக்கு மீண்டும் ஜாமீன் வழங்கி கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.