'புரட்சி படும் பாடு' என்ற தலைப்பில் சசிகலாவை திமுகவின் அதிகாரபூர்வ நாளிதழான முரசொலி சீண்டியுள்ளது.
சிறையிலிருந்து வெளியே வந்த சசிகலா, அதிமுகவின் 50-ஆவது ஆண்டையொட்டி ஜெயலலிதா சமாதிக்கு சென்று, அங்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிலையில், இந்நிகழ்வை மையப்படுத்தி, கற்பனை உரையாடல் என்று குறிப்பிட்டு சசிகலாவை சீண்டியுள்ளது திமுகவின் அதிகாரபூர்வ நாளிதழான முரசொலி.
மேலும் இதற்கு, 'புரட்சி படும் பாடு' என்றும் தலைப்பிடப்பட்டுள்ளது. ஜெயலலிதா ஆவி சசிகலாவிடம் பேசுவது போல எழுதப்பட்டுள்ள இந்த கட்டுரைக்கு சசிகலாவின் ஆதரவாளர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.