தமிழ்நாடு

வன்முறை தொடர்பாக தவறான தகவல்: காவல் துணை ஆணையர் பாலகிருஷ்ணனுக்கு நோட்டீஸ்

வன்முறை தொடர்பாக தவறான தகவல்: காவல் துணை ஆணையர் பாலகிருஷ்ணனுக்கு நோட்டீஸ்

webteam

மெரினா கலவரம் தொடர்பாக மயிலாப்பூர் துணை ஆணையருக்கு திமுகவின் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன், வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

அதில், போலீசார் அதிகாரத்தை பயன்படுத்தி கலவரத்தைத் தூண்டியதாக குறிப்பிட்டுள்ளார். மெரினா வன்முறை‌ தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பது விதிகளுக்கு புறம்பானது எனவும‌ அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. வன்முறை தொடர்பாக நடந்ததை மறைத்து ஊடகங்களுக்கு காவல் துறை தவறான தகவல்களை அளிப்பதாகவும் ஜெ.அன்பழகன் தனது அனுப்பி உள்ள நோட்டீசில் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோன்று தொடர்ந்து ஊடகங்களுக்கும், பத்திரிகைகளுக்கும் மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் தவறான தகவலைத் தெரிவித்து வந்தால், திமுக சார்பில் சட்ட‌ப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இந்த நோட்டீசின் நகல்கள், தலைமைச்செயலாளர், உள்துறை செயலாளர் உள்ளிட்டோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.