தமிழ்நாடு

பேரவை வளாகத்தில் திமுக எம்எல்ஏக்கள் போராட்டம்

பேரவை வளாகத்தில் திமுக எம்எல்ஏக்கள் போராட்டம்

webteam

தமிழக சட்டப்பேரவை வளாகத்தில் திமுக எம்எல்ஏக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், சட்டப்பேரவை வளாகத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில், பேரவைக்கு வருகை தந்த சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும், திமுக செயல்தலைவருமான ஸ்டாலினின் வாகனத்தை போலீசார் நிறுத்தி சோதனையிட்டனர். இதையடுத்து பேரவை வாயில் அருகே காரில் இருந்து இறங்கிய ஸ்டாலின் நடந்தே சட்டப்பேரவைக்குள் சென்றார். ஸ்டாலின் காரை சோதனையிட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக எம்எல்ஏக்கள் சிறிதுநேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், அரசுக்கு எதிரான கண்டன முழக்கங்களை எழுப்பியவாறே பேரவைக்குள் திமுக உறுப்பினர்கள் சென்றனர்.