திமுக எம்எல்ஏ கோரிக்கை pt
தமிழ்நாடு

"3 ஆவது குழந்தை பெற்றுக்கொள்ள சலுகை வழங்க வேண்டும்”- திமுக எம்எல்ஏ கோரிக்கை!

3ஆவது குழந்தை பெற்றுக்கொள்ள சலுகை வழங்க வேண்டும் என்று திமுக எம்.எல்.ஏ கூறியிருப்பது கவனம் பெற்றிருக்கிறது.

ஜெனிட்டா ரோஸ்லின்

தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று நடைப்பெற்றது . அதில் பேசிய திமுக எம்.எல்.ஏ பர்கூர் மதியழகன், “ நாடு சுதந்திரம் அடைந்த போது பீகாரின் மக்கள் தொகையும், தமிழ்நாட்டின் மக்கள் தொகையும் ஒன்றாக இருந்தது. இப்போது பீகார் தமிழகத்தை காட்டிலும் 4 கோடி கூடுதலாக வந்துவிட்டார்கள். மக்கள் தொகையை வைத்துதான் நிதி பகிர்வு போன்ற விஷயங்களை மத்திய அரசு செய்கிறது. தொகுதி மறுசீரமைப்பால் நாம் பாதிக்கப்படக்கூடிய சூழல் உருவாகியிருக்கிறது.

திமுக எம்.எல்.ஏ பர்கூர் மதியழகன்

தமிழகத்தில் நாம் இருவர் நமக்கிருவர் என்ற நிலைப்பாடு இருக்கிறது. எனவே, நாமிருவர் நமக்கு மூவர் என்ற நிலைப்பாட்டை தமிழக அரசு எடுக்க வேண்டும் . தமிழகத்தில் உள்ள புதுமண தம்பதிகள் 3 ஆவது குழந்தையை பெற்றுக்கொள்ள முன்வரும் பெற்றோருக்கு அரசு சலுகைகள் வழங்க வேண்டும் . ” என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே இந்தியாவில் தொகுதி மறுசீரமைப்பால் பாதிக்கப்படக்கூடிய மாநிலங்களின் முதல்வர்கள், முக்கியத் தலைவர்களின் கூட்டத்தில், மேலும் 25 ஆண்டுகளுக்கு தற்போதுள்ள நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையே நீடிக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்நிலையில், எம்.எல்.ஏவின் பேச்சு சட்டப்பேரவையில் கவனம் பெற்றிருக்கும் சூழலில், இதுக்குறித்தான அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.