தமிழ்நாடு

முதலமைச்சருக்கு ஆதரவான ட்விட்டை ரீட்விட் செய்த திமுக எம்எல்ஏ

முதலமைச்சருக்கு ஆதரவான ட்விட்டை ரீட்விட் செய்த திமுக எம்எல்ஏ

webteam

முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவான ட்விட்டர் கணக்கில் பதிவிடப்பட்ட ட்வீட்டை திமுகவைச் சேர்ந்த மன்னார்குடி எம்எல்ஏ டி.ஆர்.பி. ராஜா ரீ ட்விட் செய்துள்ளார்.

அதிமுக தலைமைக்கு எதிராக குரல் எழுப்பியுள்ள முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக அக்கட்சியைச் சேர்ந்த தொழில்நுட்ப பிரிவு இயங்கி வருகிறது. பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக சமூகவலைதள கணக்குகள் தொடங்கப்பட்டு, அவர் தொடர்புடைய செய்திகள் பதிவிடப்பட்டு வருகின்றன. இந்த சமூகவலைதள கணக்குகளில் பதிவிடப்படும் பதிவுகள் சிலவற்றை திமுக ஆதரவாளர்களும் தங்களது சொந்த கணக்குகளில் மறுபதிவு செய்து வருகின்றனர். குறிப்பாக திமுகவைச் சேர்ந்த மன்னார்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா, ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவான ட்விட்டர் பதிவொன்றை ரீ ட்விட் செய்துள்ளார்.