தமிழ்நாடு

இன்று மாலை திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

இன்று மாலை திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

webteam

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சுழலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு நேற்று பொறுப்பெற்றது. புதிய அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு சட்டப்பேரவையில் நாளை நடைபெறவுள்ளது. இந்நிலையில் திமுக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், இன்று மாலை 4 மணிக்கு, அண்ணா அறிவாலயத்தில் நடக்க உள்ளது. சட்டப்பேரவையில் நாளை நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பின் போது செயல்படும் விதம் பற்றி ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது திமுக யாருக்கும் ஆதரவு அளிக்காது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் நேற்று கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.