சிவகங்கையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் அஜித் குமார் கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், திமுக எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ் கடுமையான விமர்சனத்தைப் பதிவு செய்துள்ளார். அதில், காவல்துறை என்ற பெயரில் நடமாடும் மிருகங்கள் எனத் தெரிவித்துள்ளார். மேலும், சாமானியருக்கு ஒரு நியாயம் காவல்துறைக்கு ஒரு நியாயமா என்று கேள்வி எழுப்பியுள்ளார். கைது செய்யப்பட்ட காவலர்கள் வழுக்கி விழுந்து கட்டுப்போடப்படுவார்களா? என கேள்வி எழுப்பியுள்ள இனிகோ இருதயராஜ் போலீஸ் தப்பியோட முயற்சி என நல்ல செய்தி வருமா? என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.