உதயநிதி ஸ்டாலின் NGMPC22 - 168
தமிழ்நாடு

"அண்ணன சேகர் பாபு சொல்வதில் எனக்கு நம்பிக்கை இல்லை"- கலைஞர் நூற்றாண்டு விழாவில் உதயநிதி கலகல பேச்சு!

இந்து சமய அறநிலயத்துறை அமைச்சர் சேகர்பாபு என்னிடம் இந்த விழாவை காண வருண பகவானே வருவார் என்று கூறி இருந்தார்.

PT WEB

கலைஞர் நூற்றாண்டு விழாவில் பேசிய விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,

“இரண்டு நாட்களுக்கு முன் நடக்க வேண்டிய இந்நிகழ்ச்சியானது என் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சற்று தள்ளிபோய் விட்டது. இந்து சமய அறநிலயத்துறை அமைச்சர் சேகர்பாபு என்னிடம் இந்த விழாவை காண வருண பகவானே வருவார் என்று கூறி இருந்தார்.

அதில் எனக்கு நம்பிக்கை இல்லை, இயற்கை என்று சொல்லி இருக்கலாம். இருந்தாலும் இவர் அறநிலைத்துறை அமைச்சர் அல்லவா.. அதனால் அவரது நம்பிக்கையை நான் வரவேற்கிறேன், அவ்வாறு வருணபகவானே வந்தாலும் நாங்கள் வருக, வருக என்று தான் வரவேற்போம் ” என்று கூறினார்.