ஆ.ராசா, எ.வ.வேலு உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளனர்.
திமுக கருணாநிதி உடல்நிலை மோசமடைந்தால், காவிரி மருத்துவமனை முன்பு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர். பின்னர் உடல்நிலை சீராக இருப்பதாக காவிரி மருத்துவமனை தெரிவித்தது. இருப்பினும் தொண்டர்கள் கலைந்து செல்லாததால் காவல்துறையினர் லேசான தடியடி நடத்தி கலைத்தனர். இதனால் அங்கு சிறிதி நேரம் பதட்டம் ஏற்பட்டது. மருத்துவமனை வளாகத்தில் இருந்து ஒலிபெருக்கி மூலம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கருணாநிதி உடல்நிலை சீராக இருப்பதால், தொண்டர்கள் கலைந்துசெல்லுமாறு கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து கருணாநிதியின் குடும்பத்தினர் ஒவ்வொரும் வீட்டிற்கு சென்றனர். திமுக நிர்வாகிகளுடன் மருத்துவமனையில் இருந்து புறப்பட்டுச் சென்றனர். மு.க.அழகிரி செல்லும் போது, தலைவர் கருணாநிதி நலமுடன் இருக்கிறார், அதனால் தான் அனைவரும் வீட்டிற்கு செல்கிறோம் என்றார். இந்நிலையில் திமுக தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்த மு.க.ஸ்டாலின், எவ்வித அசம்பாவிதங்களுக்கும் இடம் கொடுத்துவிடாமல் அமைதி காக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஆ.ராசா, எ.வ.வேலு உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மீண்டும் காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளனர். மத்திய முன்னாள் அமைச்சர் சல்மான் குர்ஷித் காவேரி மருத்துவமனைக்கு வருகை தருகிறார். அவரை சந்திக்க ஆ.ராசா உள்ளிட்டோர் மருத்துவமனை வந்ததாக கூறப்படுகிறது.