தமிழ்நாடு

உள்ளாட்சித் தேர்தல் குறித்து திமுக நாளை ஆலோசனை

உள்ளாட்சித் தேர்தல் குறித்து திமுக நாளை ஆலோசனை

Sinekadhara

உள்ளாட்சித் தேர்தல் குறித்து விவாதிக்க திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் உள்ள 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை வரும் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து ஏற்கெனவே முதல்வர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தற்போது மீண்டும் நாளை இந்தக் கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை 10 மணியளவில் சென்னையிலுள்ள அண்ணா அறிவாலயத்தில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத 9 மாவட்டங்களின் திமுக செயலாளர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தவுள்ளார்.