அழகு நிலையத்துக்குள் நுழைந்து பெண்ணை தாக்கிய திமுக நிர்வாகி, கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.
பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் சத்யா என்பவர் அழகுநிலையம் நடத்தி வருகிறார். அங்கு வந்த திமுகவைச் சேர்ந்த அன்னமங்கலம் ஊராட்சிக் குழு முன்னாள் உறுப்பினர் செல்வக்குமார், சத்யாவை அடித்து உதைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரை அழ கு நிலைய பெண்கள் தடுத்தும் கேட்காமல் விரட்டி விரட்டிச் சென்று செல்வக்குமார் தாக்கும் காட்சிகள் கொடூரமாக உள்ளது.
அடிக்கடி தக ராறு செய்வதாக ஏற்கனவே அவர் மீது சத்யா, காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்துள்ள பெரம்ப லூர் நகர காவல்துறையினர் செல்வக்குமாரை கைது செய்தனர். சத்யாவை அவர் தாக்கியதற்கான காரணம் உடனடியாகத் தெரிய வில்லை.
இந்நிலையில் அவர் திமுகவில் இருந்து தற்காலிமாக நீக்கப்பட்டுள்ளார். கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தியதால் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளதாக திமுக தெரிவித்துள்ளது.