இயற்கையும் அன்னையும் இல்லாமல் எவரும் வளர்ந்திருக்கவும் வாழ்ந்திருக்கவும் முடியாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்
இன்று அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனை அடுத்து பலரும் தங்கள் அன்னையுடனான நினைவுகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் அன்னையர் தின கவிதை ஒன்றை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளார். அதில்,
''உயிரின் கரு!
உணர்வின் திரு!
வாழ்வின் உரு!
வளர்ச்சியின் எரு!
- எல்லாம் சேர்ந்தவள் அன்னை!
அவர்களால் தான் உலகம் இயங்குகிறது. இயற்கையும் அன்னையும் இல்லாமல் எவரும் வளர்ந்திருக்கவும் வாழ்ந்திருக்கவும் முடியாது!
என் அன்னைக்கும் அவர் போன்ற அன்னையர் குலத்துக்கும் வாழ்த்துகள்!
உங்கள் அன்பும் கருணையுமே உலகம் என்றும் வேண்டி நிற்பது!'' என பதிவிட்டுள்ளார். மேலும், தன் அன்னையுடன் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார்