தமிழக முதல்வருக்கு 8 வழிச்சாலை அமைப்பதில் உள்ள ஆர்வம் காவிரி நீரைப் பெறுவதில் இல்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி ஆகியோரின் சிலைகளை,திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள கலைஞர் அறிவாலய முகப்பில், இருவரின் 8 அடி உயர வெண்கல சிலைகளை அவர் திறந்துவைத்தார்.
இந்நிகழ்ச்சியில், உதயநிதி ஸ்டாலின், திமுக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர், இந்திய ஜனநாய கட்சி நிறுவனர் தலைவர் பாரிவேந்தர், தலைவர் ரவி பச்சமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதன்பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர். அப்போது பேசிய அவர் அதிமுக அரசுக்கு 8 வழிச்சாலையில் இருக்கும் ஆர்வம் காவிரி விவகாரத்தில் இல்லை என மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.