தமிழ்நாடு

தேசிய முக்கியத்துவம் பெறும் கருணாநிதியின் வைரவிழா

தேசிய முக்கியத்துவம் பெறும் கருணாநிதியின் வைரவிழா

webteam

ஜூன் 3ம் தேதி சென்னையில் கொண்டாடப்பட உள்ள திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள் மற்றும் அவரது சட்டப் பேரவை வரலாற்றின் வைரவிழா கொண்டாட்டம் ஒரு தேசிய முக்கியத்துவம் பெற்ற நிகழ்வாக மாறுவதற்கு வாய்ப்புள்ளது.

பாஜகவை எதிர்க்கும் தேசியத் தலைவர்கள் ஒருங்கிணையும் விழாவாக அது அமைய உள்ளது. இதில் பங்கேற்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, கேரள முதல்வர் பிணராய் விஜயன், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர் லல்லு பிரசாத் யாதவ், தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ், ஓடிசா முதல்வர் நவீன்பட்நாயக், ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால் இது குடியரசுத் தலைவர் தேர்தலுக்கும் அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணிக்கும் ஒரு முன்னோட்டமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.