அண்ணா நினைவிடத்தில் திமுக தலைவர் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய அனுமதிக்குமாறு திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு காலை 8;30 மணிக்கு தீர்ப்பு.
திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை உயிரிழந்தார். கருணாநிதி மறைவை அடுத்து அவரது உடலை சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் அடக்கம் செய்ய திமுக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. கோரிக்கை அடங்கிய மனுவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் திமுக தலைவர்கள் கொடுத்தனர். ஆனால், வழக்குகள் நிலுவையில் உள்ளதாலும், சட்ட சிக்கல்கள் உள்ளதாலும் மெரினாவில் கருணாநிதிக்கு இடம் அளிக்க இயலாது என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மெரினாவில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய இடம் ஒதுக்க கோரி திமுக வழக்கின் தீர்ப்பு காலை 8:30 மணிக்கு வெளியாக உள்ளது.
இந்த வழக்கை அவசர வழக்காக இரவே உயர்நீதிமன்ற விசாரித்தது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், சென்னை மாநகராட்சியும், தமிழக அரசும் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.