தமிழ்நாடு

பேரணியில் கலந்துகொள்ள நடிகர் சங்கத்துக்கு திமுக அழைப்பு

பேரணியில் கலந்துகொள்ள நடிகர் சங்கத்துக்கு திமுக அழைப்பு

webteam

குடியு‌ரிமை திருத்த சட்ட எதிர்ப்பு பேரணியில் கலந்து கொள்ளுமாறு நடிகர் சங்கத்துக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது

குடியு‌ரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்க‌ள் நடைபெற்று வருகின்றன. கல்லூரி மாணவர்கள், பல்வேறு அமைப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பலரும் குடியு‌ரிமை திருத்தத் சட்டத்திற்கு எதிராகவும், ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

குடியு‌ரிமை திருத்தத் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 23ம் தேதி (திங்கள்) பேரணி நடத்தப்படும் என திமுக அறிவித்துள்ளது. இந்தப் பேரணியில் கலந்துகொள்ள கூட்டணிக்கட்சிகள் மட்டுமின்றி மக்கள் நீதி மய்யம் கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களும், மாணவர்களும் இந்த பேரணியில் கலந்து கொள்ள வேண்டுமென திமுக தலைவர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில், CAA எதிர்ப்பு பேரணியில் கலந்துகொள்ள நடிகர் சங்கத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பேரணியில் நடிகர்கள் கலந்து கொள்ள வேண்டுமென மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். அத்துடன், தொழிலாளர் சங்கம், வணிகர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்க தலைவர்களுக்கு திமுக சார்பில் ஸ்டாலின் கடிதம் அனுப்பி பேரணியில் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

இதனிடையே, வரும் 23 ஆம் தேதி எழும்பூர் சிஎம்டிஏ அலுவலகத்திலிருந்து, ராஜரத்தினம் மைதானம் வரை பேரணியாக செல்ல அனுமதி வேண்டும் என்று காவல்துறையிடம் திமுக மனு கொடுத்து இருக்கிறது.