நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்! முகநூல்
தமிழ்நாடு

’பிரிவினைவாத உணர்வைப் பரப்பும் ஆபத்தான மனநிலை..’ - திமுக அரசு மீது நிதியமைச்சர் காட்டமான விமர்சனம்!

நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தளப்பதிவில், திமுகவிற்கு ரூபாயின் சின்னத்தில் பிரச்சினை இருந்தால் 2010 ஆம் ஆண்டே காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இருந்த போது ஏன் எதிர்க்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.

PT WEB

ரூபாயின் சின்னத்தை அகற்றுவதன் மூலம் திமுக ஒரு தேசிய சின்னத்தை நிராகரிப்பது மட்டுமின்றி தமிழரின் படைப்பையும் புறக்கணிப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சாடியுள்ளார்.

நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தளப்பதிவில், திமுகவிற்கு ரூபாயின் சின்னத்தில் பிரச்சினை இருந்தால் 2010 ஆம் ஆண்டே காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இருந்த போது ஏன் எதிர்க்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார். திமுக எம்.எல். கு. தர்மலிங்கத்தின் மகன் உதயகுமார் உருவாக்கிய ரூபாயின் சின்னத்தை அகற்றுவதன் மூலம் திமுக ஒரு தேசிய சின்னத்தை நிராகரிப்பது மட்டுமின்றி தமிழரின் படைப்பையும் புறக்கணிப்பதாக கூறியுள்ள நிர்மலா சீதாராமன், ரூபாய் என்ற வார்த்தையே சமஸ்கிருத வார்த்தையுடன் தொடர்புடையது என சுட்டிக்காட்டியுள்ளார்.

சமஸ்கிருதத்தில் தோன்றியதால், தெற்காசியாவிலும் தென்கிழக்கு ஆசியா முழுவதிலும் பகிரப்பட்டு கலாச்சார பொருளாதார மரபாகியுள்ளது என குறிப்பிட்டுள்ள நிர்மலா சீதாராமன், ரூபாய் சின்னம் சர்வதேச அளவில் நன்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

யு.பி.ஐ. பயன்பாட்டை எல்லை தாண்டிய பணப்பரிமாற்றங்கள் மேற்கொள்ள இந்தியா அழுத்தம் கொடுக்கும் நேரத்தில் நாம் நமது தேசிய நாணய சின்னத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்த வேண்டுமா என கேள்வி எழுப்பியுள்ள நிர்மலா சீதாராமன், மாநில பட்ஜெட் ஆவணங்களில் ரூபாய் சின்னத்தை நீக்குவது தேச ஒருமைப்பாட்டுக்கு எதிரானது என்றும் சாடியுள்ளார். குறியீட்டு வாதம் மட்டுமல்ல, இந்திய ஒற்றுமைமைய பலவீனப்படுத்தி பிராந்திய பெருமை என்ற போர்வையில் பிரிவினைவாத உணர்வைப் பரப்பும் ஆபத்தான மனநிலையை காட்டுகிறது என்றும் நிர்மலா சீதாராமன் கடுமையாக விமர்சித்துள்ளார்.