முதுபெரும் அரசியல் தலைவரும் திமுக பொதுச்செயலாளருமான க.அன்பழகன் காலமானார். அவருக்கு வயது 98.
உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 24 ஆம் தேதி முதல் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 1 மணியளவில் அன்பழகன் உயிர்பிரிந்தது.
இதையடுத்து அவரது உடல் திமுக கொடி போர்த்தப்பட்டு கீழ்ப்பாக்கம் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. திமுக நிர்வாகிகள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் அன்பழகனுக்கு இறுதியஞ்சலி செலுத்தி வருகின்றனர்.