தமிழ்நாடு

காட்பாடியில் போட்டியிட விருப்பமனு - துரைமுருகனிடம் நேர்காணல் செய்த மு.க. ஸ்டாலின்

காட்பாடியில் போட்டியிட விருப்பமனு - துரைமுருகனிடம் நேர்காணல் செய்த மு.க. ஸ்டாலின்

EllusamyKarthik

வரும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட உள்ள திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனை அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் நேர்காணல் செய்தார். துரைமுருகன் காட்பாடி தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

1984 துவங்கி 2016 தேர்தல் வரை துரைமுருகன் காட்பாடி தொகுதியில் போட்டியிட்டு வருகிறார். அதில் 1984 மற்றும் 1991 தேர்தலில் அவர் தோல்வியை தழுவியிருந்தார். காட்பாடி தொகுதியில் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டுமென்ற கோஷமும் எழுந்திருந்தன.