தமிழ்நாடு

ஜனவரி 21-ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு

EllusamyKarthik

வருகிற ஜனவரி 21-இல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கூட உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். கட்சியின் ஆக்கப் பணிகள் குறித்து இந்த கூட்டத்தில் பேச உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

“திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 21-01-2021 அன்று மாலை 5 மணி அளவில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள ‘கலைஞர் அரங்கத்தில்’ இந்த கூட்டம் நடைபெறும். அதில் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” என துரைமுருகன் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.