ஈரோடு பெருந்துறையில் திமுக மாநில தேர்தல் பணிக்குழு துணைத்தலைவர் கே.பி சாமியின் மனைவிக்கு சொந்தமான இடத்தில் இருந்த திமுக அலுவலகம் ஹிட்டாச்சி மூலம் இடிக்கும் பணியில், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் கௌதம் மேற்பார்வை செய்தபோது கான்கிரீட் தூண் தலையில் விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் திமுக மாநில தேர்தல் பணிக்குழு துணைத்தலைவரான கே.பி சாமியின் மனைவிக்கு சொந்தமான இடத்தில் செயல்பட்டு வந்த திமுக கட்சி அலுவலக கட்டிடத்தை ஹிட்டாச்சி மூலம் இடிக்கும் பணி நடைபெற்றுவந்தது. இதனை,கே.பி சாமியின் தீவிர ஆதரவாளரான திமுகவின் பெருந்துறை மேற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளரான கௌதம் கவனித்துக்கொண்டிருந்தார்.
இந்தப்பணியின் போது, எதிர்பாராத வகையில் கான்கிரீட் தூண் கௌதமின் தலையில் விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெருந்துறை காவல்துறையினர் கௌதமின் உடலை மீட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
விபத்துக்கு காரணமான ஹிட்டாச்சி ஆப்ரேட்டர் செல்வ கிருஷ்ணனை காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.