தமிழ்நாடு

மார்ச் 11ல் திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு: ஸ்டாலின்

webteam

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அறிக்கையை மார்ச் 11 ஆம் தேதி வெளியிடுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

திமுக சார்பில்  மார்ச் 12 ஆம் தேதி வேட்புமனுத்தாக்கல் செய்ய இருக்கிறார்கள். இதனால் 11 ஆம் தேதி தேர்தலுக்கான அறிக்கையை வெளியிடுவதாக ஸ்டாலின் அறிவித்துள்ளார். 10 ஆண்டுகளுக்கான திட்டம் குறித்து அந்த அறிக்கையில் அறிவிப்புகள் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கடந்த முறை திமுக அறிக்கையில் இலவச அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தன. ஆனால் அந்த அறிவிப்புகளை இந்த முறை குறைத்துவிட்டு வளர்ச்சி திட்டங்கள் குறித்து அறிவிப்புகள் இருக்கும் என கூறப்படுகிறது. தமிழகம் கடனில் இருந்து மீள்வதற்கான வழிமுறைகள், நகைக்கடன் தள்ளுபடி, கல்விக்கடன் தள்ளுபடி அறிவிப்புகள், வேலைவாய்ப்புகள், நியமனங்கள், இட ஒதுக்கீடு போன்ற பல்வேறு முக்கியமான விஷயங்கள் குறித்தும் அறிவிப்புகள் திமுக தேர்தல் அறிக்கையில் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.