தர்மசெல்வன் pt web
தமிழ்நாடு

“அதிகாரிகள் என் பேச்சை மீறினால் மாற்றிவிடுவேன்” - திமுக மாவட்ட பொறுப்பாளர் சர்ச்சை கருத்து

தருமபுரி மாவட்டத்தில் ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் யாராக இருந்தால், தனது பேச்சை மீறினால் மாற்றிவிடுவேன் என, தருமபுரியின் திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

தருமபுரியில் நடைபெற்ற கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன் கலந்து கொண்டு நிர்வாகிகள் மத்தியில் பேசியுள்ளார். அதில், தனது பேச்சை அதிகாரிகள் கேட்காவிட்டால், அவர்கள் இருக்க மாட்டார்கள் எனக்கூறும் ஆடியோ வெளியாகியுள்ளது. இதுகுறித்து தர்மசெல்வனிடம் கேட்க முயற்சித்த போது, அவர் அழைப்பை எடுக்கவில்லை.