தமிழ்நாடு

பொள்ளாச்சி ஆர்ப்பாட்டம்: திமுகவினர் தடுத்து நிறுத்தம் - சாலையில் அமர்ந்து கனிமொழி தர்ணா!

webteam

பொள்ளாச்சி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க புறப்பட்டு சென்ற திமுக எம்.பி கனிமொழி கோவையில் தடுத்த நிறுத்தப்பட்டுள்ளார்.

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி திமுக மகளிர் அணிச் செயலாளரும் மக்களவை உறுப்பினருமான கனிமொழி தலைமையில் திமுகவினர் இன்று காலை 10 மணிக்கு பொள்ளாச்சியில் போராட்டம் அறிவித்தனர். இதற்காக திமுக எம்பி கனிமொழி மற்றும் திமுகவினர் கோவையில் இருந்து புறப்பட்டனர். கற்பகம் கல்லூரி அருகே வந்த அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், கனிமொழி மற்றும் திமுகவினர் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். 

பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இதுதொடர்பாக ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இரு பெண்கள் அளித்த புகாரின் கடந்த வாரம் மேலும் மூவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.