தமிழ்நாடு

தொப்பியுடன் சென்று பணம் கொடுத்தனர்: திமுக புகார்

தொப்பியுடன் சென்று பணம் கொடுத்தனர்: திமுக புகார்

webteam

ஆர்.கே.நகர் தொகுதியில் தொப்பி அணிந்துகொண்டு டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக வீடியோ ஆதாரத்துடன் தேர்தல் ஆணையரிடம் திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

இதுதொடர்பான புகாரினை தலைமைச் செயலகத்தில், தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கிரிராஜன் உள்ளிட்டோர் அளித்தனர். இதுதொடர்பாக தேர்தல் ஆணயம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக சார்பில் வலியுறுத்தப்பட்டதாகவும் கிரிராஜன் தெரிவித்தார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் தரப்பினர், வாக்காளர்களுக்கு தங்கநாணயம், பணம் உள்ளிட்டவைகளை கொடுப்பதாக ஓபிஎஸ் தரப்பில் தலைமைத் தேர்தல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில், திமுக தரப்பில் வீடியோ ஆதாரத்துடன் மாநில தேர்தல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.